Thursday, February 20, 2014

உளூ செய்யும் முறை

உளூ செய்யும் முறை 

يَا أَيُّهَا الَّذِينَ ءامَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்
5:6

தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

உளூ செய்யும் முன்

بِسْمِ اللَّه
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

  1. பின்னர் தனது இரு மனிக்கட்டு வரை கழுவுதல் வேண்டும்
  2. இரண்டு தடவை தண்ணீர் எடுக்காமல் ஒரே நீரில் வாயையும் மூக்கையும் சுத்தம் செய்தல்
  3. முகத்தைக் கழுவ வேண்டும்- தாடி வைத்திருப்போர் கோதி கழுவுதல்இதில் உள்ள ஒழுங்கு முறைப்படி கழுவுதல் வேண்டும்


4. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்




5.  மஸஹ் செய்ய வேண்டும் - 

இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பத்தீர்களோ அதே இடத்துக்கு திரும்ப கொண்டு வரவும்.ஒரு தடவையோ இரு தடவையோ செய்யலாம்.



6.   காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழி. (தலையை மஸஹ் செய்ய      பயன் படுத்திய   அதே நீரினை பயன்படுத்தலாம்


7.  முதலில் வலது காலையும் பின்னர் இடது காலையும் கரண்டை,           குதிகால் உட்பட முழுமையாக கழுவ வேண்டும்.



 உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 345)

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
  اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِك
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.  (ஆதாரம்: முஸ்லிம் 1165)



No comments:

Post a Comment